சிலி நாட்டின் மிருக காட்சி சாலை ஒன்றில் முதன்முறையாக சிவப்பு நிற பாண்டா கரடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்பட்டன.
"Ichiha" மற்றும் "Popo" என்ற பெயர் கொண்ட இந்த இரண்டும் ஜப்பானின் Nifrel மிருக காட்சி சாலையில் இருந்து கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டன.
கொரோனா காரணமாக இவைகள் பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி பத்திரமாக பாதுகாக்கப்பட்டதாக பூங்கா நிர்வாகி தெரிவித்தார். தற்போது இந்த பாண்டா கரடிகள் நன்கு வளர்ந்து உற்சாக நடைபோடுவதால் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு வரும் மக்கள் இவைகளின் சுட்டித்தன செய்கைகள் கண்டு ரசித்து வருகின்றனர்.