ஆயிரக்கணக்கான இந்திய ஐடி பணியாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், H-1B விசா மீது டிரம்ப் நிர்வாகம் விதிக்க முயன்ற இரண்டு கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் தடை செய்துள்ளது.
ஆண்டு தோறும் வழங்கப்படும் சுமார் 85 ஆயிரம் H-1B விசாக்களில், 60 ஆயிரம் விசாக்கள் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் கிடைத்தன. இந்த நிலையில் கொரோனாவால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த விசாவுக்கு அதிபர் டிரம்ப் அறிவித்து பல கட்டுப்பாடுகளை விதித்தார்.
அதன்படி வெளிநாட்டவரை வேலைக்கு எடுக்கும் ஐடி நிறுவனங்கள் உயர்ந்த சம்பளம் வழங்க வேண்டும் என விதிமாற்றம் செய்யப்பட்டதுடன், விசாவுக்கான தகுதிகளும் கடினமாக்கப்பட்டன. நடைமுறைக்கு கொண்டுவர முயன்ற இந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் கலிபோர்னியவின் வடக்கு மாவட்ட நீதிபதி ஜெப்ரி ஒயிட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.