ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் எண்ணிக்கை அதிகரிப்பால், 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான விளம்பரத்தில், அதிகப்படியான எண்ணிக்கையால் யானை-மனிதர்களுக்கு இடையேயான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால், யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை ஏலமிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, பராமரிக்கும் வசதி கொண்ட யார் வேண்டுமானலும், யானைகளை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.