2024ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுக் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.
அப்போது பேசிய அவர், தனது பதவிக்காலம் சிறப்பாக அமைந்ததாகவும், அடுத்த 4 ஆண்டுகளுக்கும் அதைதொடர முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை இயலாவிட்டால், 2024ம் ஆண்டு மீண்டும் சந்திப்போம் எனவும் ட்ரம்ப் பேசியதாக, விருந்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.