அமெரிக்க அதிபர் தேர்தலில், அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 3ந்தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களான பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின், பிலடெல்பியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்பை பின்னுக்குத் தள்ளி அவர் அபாரமாக வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து இந்த மாகாணங்களில் டிரம்பின் கோரிக்கை படி மறு வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்றது.