செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

மர்மமான உலோகத் தூண் ! அமெரிக்காவில் மறைந்தது, ருமேனியாவில் முளைத்தது !

Dec 01, 2020 09:34:18 PM

 அமெரிக்காவிலுள்ள உட்டா  பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக, கடந்த புதன் கிழமை தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அரசாங்கம் அதை ரகசியமாக வெளி உலகிற்கு தெரியாமல் வைக்க முயன்றது. ஆனால் அது பற்றி அறிந்த மக்கள்,பல கட்டுப்பாடுகளையும்  அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர். புகைப்படங்கள் எடுத்து இணையத்தளத்திலும் வெளியிட்டனர்.

ஆனால், புதன் கிழமை முளைத்த அந்த தூண் வெள்ளிக்கிழமையே அந்த இடத்திலிருந்து மாயமாகிவிட்டது. அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே கிடந்தது. அந்த தூணை அங்கே எழுப்பியது யார்?, மனிதர்களா இல்லை வேற்றுகிரகவாசிகளா என்பது போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், அவற்றிற்கு பதில் கிடைக்கும் முன்னரே, அது மாயமாக மறைந்தது பெரும் புதிராக உள்ளது.

அதே சமயம், அந்த தூண் 2015, 2016 ஆம் ஆண்டுகளிலேயே, அதே இடத்தில் இருந்ததாக கூகுள் செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து தெரியவந்துள்ளது. ஆனால், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள் அதே மாதிரியான ஒரு உலோக தூண், ருமேனியா நாட்டில் திடீரென தோன்றியுள்ளது.இந்த தூணின் உயரம் 13 அடி. அமெரிக்க தூணை விட ஒரு அடி அதிகம்.  

இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே வேற்றுகிரகவாசிகள் தான் இவற்றை பூமியில் வீசினார்களா..?  அல்லது யாராவது வேண்டுமென்றே பரப்பரப்பை தூண்டுவதற்கென்று இப்படி செய்கிறார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் இந்த தூண்கள் தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக இருந்தாலும், அது பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் ஆய்வு நடக்கும் இடமாகவும் அமைந்துள்ளது. அப்படி பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஒரு தூணை அமைக்கவேண்டுமானால், அரசாங்கத்தின், கலாச்சாரத்துறையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பது கட்டாயம். அதனால் இந்த தூண் குறித்த விஷயம் பெரும் மர்மமாகவே உள்ளது.

 


Advertisement
தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?
விண்வெளியில் உயிரியல் தொடர்பாக 90 ஆய்வுகளை மேற்கொண்ட சீனா.!
தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்தும் கற்பிக்கிறார் ஆப்டிகல் டிசைனர்.!
அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பேரணி
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் - டிரம்ப் உறுதி
ஹெஸ்பொல்லா மூத்த நிர்வாகியை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்
ஸ்பெயினில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய விமானப்படை
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் சிறை, அபராதம்
காலநிலை மாற்றம் என்பதே ஒரு மிகப்பெரிய மோசடி : டிரம்ப்
கூகுள் நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் திருவிழா

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement