துருக்கியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாள்தோறும் இரவு நேர முழு ஊரடங்கும், வார இறுதியில் முழு ஊரடங்கும் அமல்படுத்தபடுவதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் (Erdogan) அறிவித்துள்ளார்.
தற்போது அந்நாட்டில் 20 வயதுக்கும் குறைவானோருக்கும், 65 வயதுக்கும் அதிகமானோருக்கும் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்தபடி இருப்பதால், அனைத்து தரப்பினருக்கும் நாள்தோறும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக எர்டோகன் அறிவித்துள்ளார்.