அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
அதிபர் டிரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு பகுதியையும் அழகு படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், "America the Beautiful என்ற தலைப்பில் தாம் மேற்கொண்டுள்ள அலங்காரங்களை காட்சி படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் வெள்ளை மாளிகை அலங்கார பணிக்கு 125க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அடுத்து டிரம்புக்கு இந்த கிறிஸ்துமசை வெள்ளை மாளிகையில் கொண்டாடப்படும் கடைசி கிறிஸ்துமஸ் ஆகும்.