கொரோனா நோய் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் 100 சதவிகிதம் வெற்றி அளிக்கும் தடுப்பூசியை தயாரித்து உள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.
அங்குள்ள மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் விண்ணப்பித்துள்ள அந்த நிறுவனம் மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் தடுப்பூசி, கொரோனாவை தடுப்பதில் 94.1 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் 100 சதவிகிதம் பயன் அளிப்பதாகவும், ஆய்வுக் குழுவின் உறுப்பினர் டாக்டர் பால் ஆப்பிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஏற்கனவே பைசர் நிறுவனம் தடுப்பூசிக்கு உரிமம் கோரி கடந்த 20 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது . அடுத்த மாதமே அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஆய்வுக் கழக இயக்குநர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார்.