அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் அதிக வழிகளில் மரணதண்டனை வழங்க டிரம்ப் அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குற்றவாளிகளை தூக்கில் போடுவது, விஷவாயு மூலம் உயிரிழக்க வைப்பது மற்றும் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகளுக்கு பெரும்பாலான மாகாணங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தவகை மரணதண்டனைகள் அடுத்த மாதம் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன.