ஜனவரி முதல் சென்னை-லண்டன் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் இயக்கப்படும் 9-வது நகரம் சென்னை ஆகும்.
கொரானா காரணமாக மார்ச் மாதம் முதல் விமான சேவை ரத்து செய்யப்பட்டு, மே மாதம் முதல், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சிறப்பு ஒப்பந்தத்தின்படி ஜூலை முதல் இந்தியா- இங்கிலாந்து இடையிலும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.