ஆப்கானிஸ்தானின் கஜினி நகரில் காரில் வந்த நபர் தற்கொலை குண்டாக மாறி வெடித்ததில், குறைந்தது, 30 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
30 உடல்களும் காயமடைந்த 24 பேரும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக கஜினி மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். கார் முழுவதும் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டதாக ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கஜினி நகரில் தாலிபன்களுக்கும், அரசு பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.