ஆறு வாரங்களாக எரியும் புதர் தீயால் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகள் வெப்பத்தில் தகிக்கின்றன.
உலக கலாச்சார பாரம்பரிய பகுதியாக குயின்ஸ்லாந்தின் பிரேசர் தீவு உள்ளது. இந்த தீவில் கடந்த அக்டோபர் மத்தியில் பிடித்த புதர் தீ, தீவின் மூன்றின் ஒரு பகுதியை சாம்பலாக்கி விட்டு தொடர்ந்து எரிகிறது.
தீயின் காரணமாக ஆஸ்திரேலிய நகரங்கள் மிகவும் சூடான நவம்பர் மாதத்தை சந்தித்துள்ளன. சிட்னி நகரத்தில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
நியூ சவுத் வேல்சின் மேற்கு பகுதி, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணங்களில் வெப்பநிலை 45 டிகிரியை தொட்டுவிட்டது. புதர் தீயால் ஏற்பட்ட வெப்ப அலை மேலும் ஐந்தாறு நாட்களுக்கு நீடிக்கும் என ஆஸ்திரேலிய வானிலை துறை தெரிவித்துள்ளது.