ஐரோப்பா கண்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் அமெரிக்க கண்ட நாடுகளுக்கு அடுத்து ஐரோப்பா கண்ட நாடுகள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்நாடுகளில் 1 கோடியே 82 லட்சத்து 83 ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 4 லட்சத்து 7 ஆயிரத்து 968 பேர்பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவில் பிரான்சில்தான் அதிகபட்சமாக 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் கூறியுள்ளது.