கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து ஜெனீவாவில் நடந்த மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ், “கொரோனா வைரஸ் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.
“ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற அவர், ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றார். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் தான் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.