அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பென்சில்வேனியாவில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக டிரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லும் என்ற கீழமை நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
வெற்றியை அமெரிக்க வாக்காளர்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்ற நீதிபதிகள், அதில் வழக்கறிஞர்களுக்கு எந்த பங்கும் இல்லை என கூறி டிரம்ப் தரப்பிற்கு குட்டு வைத்தனர்.