நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24ம் தேதி கிறைஸ்ட்சர்ச் (Christchurch) நகருக்கு வந்து சேர்ந்த பாகிஸ்தான் அணியினர் 14 நாட்கள் தனிமை காலத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனிடையே கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணிக்கு நியூசிலாந்து அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.