கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிரியாவைச் சேர்ந்த அவரது ரசிகர் இடிந்த வீட்டில் ஓவியம் வரைந்துள்ளார்.
உள்நாட்டு போரால் சிதிலமடைந்த இட்லிப் நகரைச் சேர்ந்த அஜிஸ் அஸ்மார் என்பவர் மாரடோனாவின் தீவிர ரசிகராக இருந்து வந்தார். இந்நிலையில் மாரடோனாவின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அஜிஸ் அவரைப் பெருமைப்படுத்தும் வகையிலும், புலம் பெயர் மக்களின் வாழ்வை நினைவூட்டும் விதத்திலும் போரினால் சிதைந்த கட்டடத்தில் ஓவியத்தை வரைந்துள்ளார்.