அமெரிக்காவின் orlando மாகாணத்தில் உள்ள பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி குழுமத்தில் இருந்து சுமார் 32ஆயிரம் பேர் வேலையில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இந்த டிஸ்னி லாண்டும் மூடப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இதன் கிளைகள் மூடப்பட்டன.
இதன் காரணமாக பொருளாதார சிக்கலில் தவித்து வந்த டிஸ்னி குழுமம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. முதலில் 28ஆயிரம் பேர் நீக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 32ஆயிரமாக உயர்ந்துள்ளது.