தங்களது தடுப்பூசி மிகவும் திறன் வாய்ந்தது என ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும், ஆஸ்ட்ராஜெனகாவும் தெரிவித்த சில தினங்களில், இந்த தடுப்பூசியில் குறிப்பிடத்தக்க உற்பத்தி கோளாறு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக, இறுதிக்கட்ட சோதனையில், தன்னார்வலர்கள் பலருக்கு எதிர்பார்த்த அளவிற்கு தடுப்பூசி டோசுகள் போடப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரம், குறைவாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் மற்றவர்களை விட அதிகம் ஏற்பட்டுள்ளதால், இந்த தடுப்பூசி குறித்து பல கேள்விகள் எழும்பி உள்ளன.