மியான்மரில் ஆளும் கட்சிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி ஒருவர் அடையாளம் காணப்படாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வடக்கு ஷான் மாகாணத்தைச் சேர்ந்த டிக்கே ஷா என்பவர் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சி தரப்பில் எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று அவர் தனது வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
டிக்கேவைச் சுட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு மியான்மர் அரசு உத்தரவிட்டுள்ளது.