அமெரிக்காவில் டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோன்டனா என்ற இடத்தில் அகழாய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டி ரெக்ஸ் மற்றும் ட்ரைசெராப்டோஸ் வகை டைனோசர்களின் எலும்புக் கூடுகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இவையிரண்டும் சண்டையிட்டுக் கொண்டே இறந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், முழுமையான அனைத்து எலும்புகளும் கொண்ட டைனோசரின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று தெரிவித்துள்ளனர்.