அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், டிரம்பின் ஆதரவாளர்களே வாக்கு எண்ணிக்கைக்கு இடையூறு விளைவிப்பதாக தேர்தல் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜோ பைடன் வெற்றி பெற்ற வின்கான்ஸின் மாகாணத்தின் மில்வாக்கீ மற்றும் டேன் கவுன்டிஸில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரிய டிரம்ப், இதற்காக 3 மில்லியன் டாலர் செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த மையங்களில் டிரம்ப் தரப்பில் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிலர் விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும், வாக்கு எண்ணும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து பணி செய்வதை தடுப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.