ஒருமுறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு 1850 ரூபாய் முதல் 2740 ரூபாய் வரை கட்டணம் பெறப்படும் என ஜெர்மனியின் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் மாடர்னா நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதித்ததில் அது 94 விழுக்காடு செயல்திறன் மிக்கது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒருமுறை செலுத்துவதற்கான இந்த மருந்தின் விலை 1850 ரூபாய் முதல் 2740 ரூபாய் வரை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கோடிக்கணக்கான முறை செலுத்தும் மருந்தை வாங்கும்போது விலையைக் குறைக்க முடியுமா என ஐரோப்பிய ஒன்றியம் மாடர்னாவிடம் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.