அமெரிக்காவில் அவசரகால தேவைக்கு கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த Pfizer நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவின் Pfizer நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி தீவிரமான பக்க விளைவுகள் ஏதுமின்றி 95 சதவீதம் அளவுக்கு பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதை, Pfizer CEO Albert Bourla உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா தடுப்புமருந்தான கோவேக்சின் மூன்றாம் கட்ட விரிவான பரிசோதனையை நடத்தி வரும் பாரத் பயோடெக் நிறுவனம், இதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.