அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
மில்வாக்கீ நகரில் உள்ள மே பீல்டு வணிக வளாகம் முன்பு துப்பாக்கியுடன் வந்த இளைஞன் ஒருவன், அங்கிருந்த பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதாகவும், பின்னர் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.