ரெம்டிசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.
இந்த மருந்தை உலகம் முழுவதும் 50-க்கும் அதிகமான நாடுகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ரெம்டிசிவர் மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றத்தையோ அல்லது வெண்டிலேட்டர் உதவியுடனான சிகிச்சையை குறைக்கிறது என்பதற்கோ, எந்த ஆதாரமும் இல்லை என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.