போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள், ரேடார்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய கப்பலை தனது கடற்படையில் ஈரான் சேர்த்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா 2018ம் ஆண்டில் விலகியதையடுத்து அந்நாட்டுக்கும் ஈரானுக்கும் இடையே உரசல் நிலவி வருகிறது. இந்நிலையில் சாகித் ருடாகி எனும் பெயரை கொண்ட புதிய போர் கப்பலை தனது கடற்படையில் ஈரான் சேர்த்துள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர்கள், படகுகள், டிரோன்கள், ஏவுகணை செலுத்தும் சாதனங்கள் ஆகியவற்றுடன் அக்கப்பல் இருக்கும் வீடியோ காட்சியையும் ஈரான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.