அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் உரிய அனுமதி பெற்ற சில மணி நேரத்தில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா, தங்களது நிறுவனம் 2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை தயாரித்து உள்ளதாகவும், அவசர கால அங்கீகாரத்திற்கு அனுமதித்து, ஒப்புதல் கிடைத்ததும் உடனடியாக விநியோகம் தொடங்கும் என்றும் கூறினார்.
எந்த நாடு முதலில் பைசர் மருந்திற்கு ஒப்புதல் அளிக்கிறதோ அவர்களுக்கும், உடனடியாக தடுப்பூசி விநியோகிக்கப்படும் என ஆல்பர்ட் கூறியுள்ளார்.