தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமானது.
அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, 44 வயதான கர்னல் ஜியாங் என்ற விமானி ஓட்டிய எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது.
மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.