ரஷ்ய தமிழ் அறிஞரான அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி alexander-dupyansky மாஸ்கோவில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
ரஷ்யாவின் 10 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர் தமிழ் மொழியைக் கற்றுத் தந்தார்.
பேராசிரியர் துப்யான்ஸ்கியை மையமாகக் கொண்டுதான் ரஷ்யாவில் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் ஆய்வுகள் நடந்து வந்தன. கோவையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரும் பங்கேற்றார்.