அஸர்பைஜானுடனான போரில் தோல்வியடைந்து விட்டதாக ஆர்மீனிய பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார்.
நாகோர்னா, காரபாக் பகுதிகளுக்கான இருநாடுகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. ரஷ்யா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தப் போரில் ஆர்மீனியா தோல்வியடைந்தது. இதனை அந்நாட்டுப் பிரதமர் நிகோல் பாஷினியன் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனக் குறிப்பிட்டவர், ராஜினாமா செய்யவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.