அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறிய சைபர் மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பு இயக்குனர் (Cybersecurity and Infrastructure Security Agency) கிறிஸ் க்ரெப்ஸை (Chris Krebs) அதிபர் டிரம்ப் பதவிநீக்கம் செய்துள்ளார்.
அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்ற போதிலும், அதை டிரம்ப் ஏற்கவில்லை. ஆனால் இதை தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த அமைப்பின் இயக்குநரான கிறிஸ் க்ரெப்ஸ் மறுத்திருந்தார்.
இந்நிலையில் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் க்ரெப்சின் கூற்று தவறு என்றும், ஆதலால் அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.