எப்.16 (F-16 ) போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது காணாமல் போனதால் தன்னிடமுள்ள அந்த ரகத்தை சேர்ந்த அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு பரிசோதனையை தைவான் மேற்கொள்ளவுள்ளது.
சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து 1997 முதல் சுமார் 150 எப்.16 விமானங்களை தைவான் வாங்கியுள்ளது.
அதில் ஒரு விமானம், ஹூலியன் விமான படைதளத்தில் இருந்து புறப்பட்ட 2 நிமிடங்களில் 6 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது காணாமல் போனது.
அதில் இருந்த விமானியின் நிலையும் தெரியவில்லை. அந்த விமானத்தை தேடும் பணி நடைபெறும் நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த அதிபர் உத்தரவிட்டுள்ளார்.