ஈராக்கில் முக்கியப் பிரமுகர்கள் இருக்கும் பகுதியை நோக்கி ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல் அல்ஃப்தார் என்ற இடத்தில் இருந்து நேற்று 4 ராக்கெட்டுக்கள் வீசப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈராக்கிலிருந்து 2 ஆயிரம் வீரர்களை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.