மீன்கள் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கை முன்னாள் அமைச்சர் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.
மீன்கள் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்று பரவிய தகவலால் இலங்கை மக்களில் பெரும்பாலோனர் மீன்களை தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன்கள் விற்பனை சரிந்து, ஏராளமான மீனவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் இந்த அச்சத்தைப்போக்கும் விதமாக இலங்கை முன்னாள் அமைச்சர் திலீப் வெத ஆராச்சி, கொழும்புவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். கையோடு கொண்டு வந்திருந்த மீன்களில் ஒன்றை ஒரு கடி மட்டும் கடித்து சுவைத்தார்.