கடந்த வாரம் ஈரானின் முக்கிய அணு ஆராய்ச்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு துணை அதிபர் மைக் பென்ஸ், முப்படை தலைமை தளபதி மார்க் மில்லி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் டிரம்ப் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நடவடிக்கை மிகப்பெரிய போராக வெடித்து விடும் என்பதால், அது வேண்டாம் என ஆலோசகர்கள் டிரம்பிற்கு அறிவுரை கூறியதால், அதில் இருந்து அவர் பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.