அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுடன் அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா, ஜிஏபி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சோனியா சிங்கால் உள்பட 9 பிரபல நிறுவன தலைமை நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அப்போது அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பைடன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது துணை அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள கமலா ஹாரீசும் உடனிருந்தார்.