பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே போயிங் 737 மேக்ஸ் விமானங்களை மீண்டும் இயக்க அமெரிக்க அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த இருவேறு விபத்துக்களில் 346 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் போயிங் நிறுவனத்தின் மேக்ஸ் ரக விமானங்களுக்குத் தடை விதித்தன. இதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்று, ஆட்குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் கடும் சிக்கலுக்கு உள்ளானது.
இதனால் தங்கள் தயாரிப்பு விமானங்களை மறு ஆய்வு செய்ய போயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்தே அமெரிக்க விமான நிர்வாகத்துறை, போயிங் விமானங்களை இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.