இங்கிலாந்தில் 3டி தொழில்நுட்பம் மூலம் எலக்ட்ரிக் காரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
முப்பரிமாணங்களில் அச்சிடும் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் 3டி தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.
இந்த முறையில் மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் காரினால் 45 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயணிக்க முடியும்.
பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கார் 150 கிலோ எடை கொண்டதுடன் அடுத்த 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என அதனைத் தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர். பச்சோந்தி என பொருள்படும் வகையில் கெமிலியான் என இந்த வண்டிக்கு பெயரிடப்பட்டுள்ளது.