தடுப்பூசியால் மட்டுமே கொரோனா தொற்றை தடுக்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசி தற்போதுள்ள கருவிகளுக்கு மாற்றாக அமையாது எனவும், தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை தொடர வேண்டும் என்றும் கூறினார். தடுப்பூசி கிடைத்ததும் சுகாதாரப் பணியாளர்கள், வயதானவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிப்பதால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, சுகாதார அமைப்புகளை சமாளிக்கலாம் என்றும் டெட்ராஸ் குறிப்பிட்டார்.