ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற வெனிசுலாவைச் சேர்ந்த வாள்சண்டை வீரர், தனது வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர் ரூபன் லிமார்டோ. கொரோனா பேரிடரால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இவர், தனது அன்றாட தேவைகளுக்காக போலந்து நாட்டில் உள்ள லோட்ஸ் நகரில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.