கடந்த சனிக்கிழமை மட்டும் உலகம் முழுவதும் ஒரே நாளில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இது இது வரை இல்லாத ஒரு உயர்வு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், அமெரிக்க நாடுகளில் மட்டும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 225 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. ஒவ்வொரு வாரமும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைரஸ் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
செவ்வாய், புதன் கிழமைகளில் தொற்று பரவல் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட இன்னும் பல காலம் பிடிக்கும் என்பதையே இந்த புள்ளிவிரங்கள் காட்டுவதாக உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியெசஸ் கூறியுள்ளார்.