பெல்ஜியத்தில் பெண் பந்தயப் புறா ஒன்று இந்திய மதிப்பீட்டில், 14 கோடி ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
2 வயது மட்டுமே ஆன நியூ கிம் எனும் அந்தப் புறாவின் ஏலத்தொகை, 17 ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கிய நிலையில், சீனாவைச் சேர்ந்த நபர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
முன்னதாக, பிரான்சில் 2018ல் நடைபெற்ற இரண்டு நடுத்தர பந்தயத்தில் நியூ கிம் புறா முதலிடம் பிடித்ததோடு, பெல்ஜியத்தின் சிறந்த இளம் புறா என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றது.