கியூபா நாட்டில் ஹவானா விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.
இங்கு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை சுற்றுலா செல்வதற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. கியூபா நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கியப் பங்காற்றி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த விமான நிலையம் கடந்த ஏழரை மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டதால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் ஹவானா விமான நிலையம் வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.