குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், மாணவர்களுக்கு விசா கட்டுப்பாட்டில் ஐக்கிய அரபு அமீரகம் தளர்வுகளை அறிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களுக்கு மட்டும் சலுகைகள் அளித்து வரும் நிலையில், முனைவர் பட்டம் பெற்றவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவு பாடம் படிப்பவர்கள் போன்றவர்கள் 10 ஆண்டுகள் வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர் என, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.