பெருவில் முன்னாள் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட மார்ட்டின் விஸ்காரா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்நாட்டின் நாடாளுமன்ற தலைவரான மேனுவல் மெரினோ அதிபராக பதவியேற்றுக் கொண்டதையடுத்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் லிமாவில் போலீசார் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், தடுப்புகளை மீறி போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தை கலைத்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில், 2 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.