அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஈரானில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1998ல் ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அபு முகமது அல் மஸ்ரி. அல்கொய்தா அமைப்பின் அடுத்த தலைவராக கருதப்பட்ட இவர் அமெரிக்காவால் பல வருடங்களாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 7ம் தேதி டெஹ்ரானில், அமெரிக்காவின் உத்தரவின் பேரில் செயல்படும் இஸ்ரேலைச் சேர்ந்தவர்களால் அல் மஸ்ரி சுட்டுக்கொல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.