கொரோனா பரிசோதனையில் தனக்கு இருவேறுபட்ட முடிவுகள் வந்த நிலையில், ஏதோ போலியான விஷயம் நடந்துகொண்டிருப்பதாக டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் ஒரே நாளில் 4 முறை தனக்கு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் 2 முறை பாசிடிவ் என்றும், 2 முறை நெகடிவ் எனவும் ரிசல்ட் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரே சோதனைக்கருவிகளைக் கொண்டு ஒரே செவிலியர் சோதனை மேற்கொண்டபோதும் ஒவ்வொரு முறையும் இருவேறுபட்ட முடிவுகள் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.