சிறையில் இருந்தபோது தனது அறையிலும், குளியலறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் மகள் மரியம் ஷெரிப் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சக்கரை ஆலை ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மரியம், தற்போது தனது தந்தையின் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது சிறை அனுபவங்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சிறையில் தன்னை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கூறியுள்ளார்.